ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     நிதி நெருக்கடி காரணமாக கரோனா மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தார்க்கு நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்தை தர இயலாது என மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

·     ராமன் கோயில் கட்டுவதற்கு வாங்கப்பட்ட நிலம் குறித்த ஊழல் புகாரை உச்ச நீதிமன்றமும், பிரதமர் மோடி யும் விசாரித்திட காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

·     நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என பல சமூக அமைப்புகள் தமிழ் நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி .கே.ராஜன் குழுவிற்கு மனு அளித்துள்ளனர்.

·     தமிழ் நாடு உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் உச்ச நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என திமுக எம்.பி. வில்சன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மோடி அரசின் கல்வித்துறையில் இயங்கும் தன்னாட்சி அமைப்பான உஜ்ஜைனை தளமாகக் கொண்ட மகர்ஷி சந்திபனி ராஷ்டிரிய வேத வித்யா பிரதிஷ்டான் (எம்.எஸ்.ஆர்.வி.வி.பி) எதிர்ப்பையும் மீறி தனியார் கல்வி நிறுவனமான பதஞ்சலி அதிபர் பாபா ராம்தேவ் நடத்தும் பாரதீய சிக்ஷா வாரியத்திற்கு தேசிய அளவில் வேத பாடசாலை வாரியம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டால் மட்டுமே, சிவசேனா கட்சித்தலைவர்கள் மோடி அரசின் வருமான வரித்துறை போன்ற அமைப்புகளால் ஏற்படும் பிரச்சினை களில் இருந்து தப்ப முடியும் என சிவ சேனா சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் சர்நாயக், முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதியுள்ளார்.

- குடந்தை கருணா

21.6.2021

No comments:

Post a Comment