கருநாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 21, 2021

கருநாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறல்

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்சென்னை,ஜூன்21- இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு,

கருநாடக மாநிலத்தில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப் பணை கட்டும் பணி விரைவில் தொடங்கும் என அம்மாநில முதல மைச்சர் பி.எஸ்.எடியூ ரப்பா தெரிவித்திருப்பது கடுமையான அத்துமீறலா கும்.

காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பான காவிரி நடு மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்புக்கும், இதன் தொடர்ச்சியாக உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கும் எதிராக கருநாடக முதலமைச்சர் பேசுவது அரசியல் சாசன நெருக்கடியை உருவாக் கும் செயலாகும். ஒரு மாநில மக்களை மற் றொரு மாநில மக்களுக்கு எதிராக தூண்டி விட்டு பகை ஏற்படுத்தும் தீய உள்நோக்கம் கொண் டது. கூட்டாட்சி கோட் பாட்டையும் மாநிலங்க ளுக்குஇடையிலான உறவுகளையும் சிதைக்கும் செயலாகும்.

கருநாடக முதலமைச் சரின் அத்துமீறலை இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு செயற்குழு வன்மையாகக் கண்டிப்ப துடன் ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் மோடி தலையிட்டு தடுத்து, மேக தாது பகுதியில் தடுப்பு அணை கட்டுவதை நிரந் தரமாக கைவிடச் செய்ய வேண்டும். இதில் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டு வதை தொடர்ந்து அனு மதிக்க முடியாது என் பதை சுட்டிக்காட்டி மேக தாது அணை கட்டும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி தமிழ் நாடு ஒன்றுபட்டு போரா டும் என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்த அனை வரும் ஒன்றுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment