டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசமைப்பு சட்டத்தை பின்பற்றும் நாகரிக சமுதாயத்தில் ஆயுதமின்றி போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது கொடூரம்: தூத்துக்குடி சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* விவசாய சட்டங்களுக்கு எதிராக அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் ஆளுநர் வீட்டிற்கு அணிவகுத்து, ஒன்றிய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏழு மாதங்கள் நடத்திய போராட்டத்தை நிறைவு செய் வதற்கான குறிப்பை சமர்ப்பிப்பார்கள். குடியரசுத் தலைவருக்கு இந்த குறிப்பாணை ஆளுநர் மூலமாக அனுப்பப்படும் என்று சன்யுக்ட் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.
* புதுச்சேரிக்கு உறுதியற்ற தன்மை புதியதல்ல. ஆனால் செயல்படும் அரசாங்கம் இல்லாமல், குறிப்பாக கோவிட் காலத்தில், உரிமையைப் பயன்படுத்துவது கிட்டத் தட்ட ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாகக் குறைக்கப்பட்டது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
தி ஹிந்து:
* ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை வாரியத்தை ஏழு கார்ப்பரேட் நிறுவனங்களாகப் பிரிப்பதற்கான அமைச் சரவை முடிவுக்கு எதிராக காலவரையற்ற வேலை நிறுத்தத் தில் ஈடுபடுவதாக அச்சுறுத்தி, பாதுகாப்பு சிவில் ஊழியர் களின் மூன்று முக்கிய அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்புகள் கூட்டாக பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி யுள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தமிழ் நாட்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் எந்த எண்ணமும் இல்லை என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment