செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 22, 2021

செய்தியும், சிந்தனையும்....!

ஆஹா, ஊஹா, யோஹா!

* அரியானா மாநில பள்ளிகளில் ஒன்றுமுதல் 10 ஆம் வகுப்புவரை மாணவர்களுக்கு யோகா பாடம்.

>> அப்படியே இராமாயணம், பாரதம், கீதை, புராணக் குப்பைகளையும் அவர்கள் மண்டைக்குள் திணிக்கலாம்தானே!

எது வேண்டும்?

* கல்லூரி முதல் ஆண்டிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்.

>> தயாராக வேண்டுமா? தயாரிக்கப்பட வேண் டுமா? அப்படி எல்லாம் தயாரிக்க மாட்டார்கள். அப்படி தயாரித்தால் அவாளைத் தவிர மற்றவாளும் அய்..எஸ்., அய்.பி.எஸ். ஆகிவிடுவாளே!

யாருக்கு சக்தி?

* கரோனா காரணமாக அமர்நாத் யாத்திரை இவ்வாண்டு ரத்து.

>>  அமர்நாத் சிவலிங்கத்தைவிட கரோனா சக்தி வாய்ந்ததோ!

No comments:

Post a Comment