டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டின் கீழ், நடப்பு கல்வியாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னை:
· ஒன்றிய அரசின் 27 சதவீத அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 50 சதவீத இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்க்கு கிடைத்திட திமுக தொடர்ந்து போராடும் என அறிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· உபி தேர்தலை மனதில் கொண்டு மோடி அரசு இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர்ஜாதி வருமானம் குறைந்தோர்க்கு இட ஒதுக்கீடு அளித்திட முடிவு செய்துள்ளது என கட்டுரையாளர் லிஸ் மாத்யூ குறிப்பிட்டுள்ளார்.
· பீகார் மாநிலத்தில் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்க்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு விவரங்களை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குத் தர பீகார் அரசு மறுத்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· மாநில உரிமைக்காக திமுக, திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்தபின் மம்தா கருத்து.
தி டெலிகிராப்:
· பெகாசஸ் சர்ச்சை தொடர்பாக ஒன்றிய அரசிடம் இருந்து பதில்களைக் கோருவதற்கு உச்சநீதிமன்றத்தின் உடனடி தலையீட்டைக் கோரி 500 க்கும் மேற்பட்ட குடிமக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
· ஹிந்துத்துவா கருத்தில் இதயத்திலும், சிந்தனையிலும் எந்த மாற்றமும் தெரியவில்லை, ஆனால் தந்திரோபாயங்களில் மாற்றம் காணப்படுகிறது என கட்டுரையாளர் மேத்யூ ஜான் குறிப்பிட்டுள்ளார்.
· பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகளை உடனடியாக விவாதிக்க மோடி அரசு விவாதத்திற்குத் தயங்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் மக்களவையில் ஒரு கையெழுத்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 71%, தாழ்த்தப்பட்டோர் 24% உள்ளனர். இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் 45%, 19% தாழ்த்தப்பட்டோர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment