10 ஆயிரம் வாகனங்கள் விற்பனை டாடா மோட்டார் சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

10 ஆயிரம் வாகனங்கள் விற்பனை டாடா மோட்டார் சாதனை

புதுடில்லி, ஜூலை 29- டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 10 ஆயிரமாவது புதியசபாரிகாரை விற்பனை செய்துள்ளதாக அறிவித் துள்ளது.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தின் பயணியர் வாகன விற்பனை பிரிவு தலைவர், சைலேஷ் சந்திரா கூறிய தாவது: மகாராட்டிர மாநிலம் புனே தொழிற் சாலையில், டாடா மோட் டார்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட, புதிய சபாரி கார் தயாரிக்கப்படு கிறது. இந்தாண்டு, பிப்ர வரியில், 100ஆவது கார் விற்பனை செய்யப்பட் டது. இதைத் தொடர்ந்து, நான்கு மாதங்களில், 9 ஆயிரத்து 900 சபாரி கார்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

கரோனாவால் ஊர டங்கு கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், குறு கிய காலத்தில், 10 ஆயிரம் சபாரி கார்களை நிறுவ னம் தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளது. உலகப் புகழ் பெற்றலேண்டுரோவர்-டி8’ காரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள, புதிய சபாரி காருக்கு, சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment