மாணவர்கள் திறன்பேசி வாங்க வட்டி இல்லா கடன் வசதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

மாணவர்கள் திறன்பேசி வாங்க வட்டி இல்லா கடன் வசதி

திருவனந்தபுரம், ஜூலை 29- கல்வி கற்க மாணவர்கள் திறன்பேசி வாங்க வட்டியில்லா கடன் வழங்கப் படும் என முத்தூட் ஃபின் கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா பெருந் தொற்று பரவலைக் கட் டுப்படுத்த இப்போது மாணவர்களுக்கு இணைய வழி கல்வி கற்பிக்கப்படுகி றது.

இதில் ஏழை மாண வர்கள்திறன்பேசி போன்ற டிஜிட்டல் சாத னங்களை வாங்க முடியா மல் கஷ்டப்படுகின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் ``வித்யா தன்'' என்ற பெயரில் வட்டியில்லா கடன் உதவித் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளதாக நிறுவ னத்தின் தலைவர் தாமஸ் ஜான் முத்தூட் தெரிவித்துள்ளார்.

முன்னுரிமை அடிப் படையில் முதலில் வரும் ஒரு லட்சம் மாணவர்க ளுக்கு நிறுவனத்தின் 3,600 கிளைகளில் வழங் கப்படும் என தெரிவித்து உள்ளார்.

இத்திட்டத்தின்படி பள்ளி அடையாள அட் டையின் நகலை விண் ணப்பதுடன் சமர்ப்பித்து கடன் பெறலாம். இந்தக் கடனை 6 மாத காலத்தில் திரும்பச்செலுத்த

வேண்டும். இதற்கு பரிசீலனைக் கட்டணம் கிடையாது.

முதல் மூன்று மாதங் களுக்கு வட்டி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரு மாணவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள் ளது.

No comments:

Post a Comment