அபுதாபி, ஜூலை 29- விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக அய்க்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. குறிப் பாக, துபாய் பல்வேறு நாடுகளை இணைக் கும் மய்யமாக திகழ்கிறது.
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் இருந்து அய்க்கிய அரபு அமீரகத் திற்கான விமான சேவையை அய்க்கிய அரபு அமீரகம் தடைசெய்திருந்தது.
அய்க்கிய அரபு அமீ ரக அரசு தனது குடிமக் கள் இந்தியா, பாகிஸ் தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்வ தற்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், அய்க் கிய அரபு எமிரேட்சின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணை யம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் இருந்து வரும் விமானங் களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகஸ்டு 2ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக தெரிவித் துள்ளது.

No comments:
Post a Comment