அமெரிக்காவில் புழுதிப் புயல் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து; 8 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

அமெரிக்காவில் புழுதிப் புயல் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து; 8 பேர் உயிரிழப்பு

வாசிங்டன், ஜூலை 29- அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நக ருக்கு அருகே மிகப்பெரிய நெடுஞ்சாலை உள்ளது. கடந்த 25.7.2021 அன்று மாலை இந்த நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவ குத்து சென்று கொண்டி ருந்தன. விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விடவும் போக்குவரத்து மிகவும் நெரிசலாக இருந்தது.

இந்த நிலையில் அங்கு திடீரென பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து அங்கு புழுதிபுயல் உரு வானது. இதனால் நெடுஞ் சாலையில் வாகன ஓட் டிகளுக்கு, முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் போனது.இதன் காரணமாக நெடுஞ் சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று முன் னால் சென்ற ஒரு காரின் மீது மோதி நின்றது. இதையடுத்து லாரிக்கு பின்னால் வந்து கொண் டிருந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. இப்படி மொத் தம் 22 வாகனங்கள் ஒன் றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

முன்னதாக கடந்த மாதம் 20ஆம் தேதி அல பாமா மாகாணத்தில் புயல் தாக்கியபோது 15 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட சங்கிலி தொடர் விபத்தில் 10 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment