சியோல், ஜூலை 29- தென் கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,896- பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் ஏற்பட்ட அதிகபட்ச கரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவேயாகும். முன்ன தாக கடந்த 9 ஆம் தேதி 1,318- பேருக்கு பாதிப்பு ஏற் பட்டதே ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது.
ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்தில் 1,520 தலிபான்கள் கொலை
காபூல், ஜூலை 29- ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு மாவட் டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 20 மாகாணங்களில் 154 ராணுவ அதிரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. தரை, வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதில் 1,520 தலிபான்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது. எனினும், இதற்கு பதிலளித்த தலிபான் இயக்கம், இந்த எண்ணிக்கை அதிகம் என கூறியுள்ளதுடன், ஒரு சார்புடையது என தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment