ஈராக்கில் இருந்து ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும்: அதிபர் ஜோ பைடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

ஈராக்கில் இருந்து ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும்: அதிபர் ஜோ பைடன்

வாசிங்டன், ஜூலை 29- அய்.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்காக அமெ ரிக்கா கடந்த 2014ஆம் ஆண்டு ஈராக் நாட்டுக்கு தனது படை களை அனுப்பியது. அமெரிக்க படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் அய்.எஸ். பயங்கரவா திகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது. அய்.எஸ். பயங் கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட தாக கடந்த 2017ஆம் ஆண்டுஈராக் அறிவித்தது.

இருப்பினும் அங்கு அய்.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இன்னமும் தொடரும் நிலையில் அவர்களை எதிர்த்து சண்டையிட அமெரிக்க படைகள் ஈராக் கில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளன.இதற்கிடையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின் றனர். இதனால் அமெரிக்கா தனது படைகளை திரும்ப பெற வேண்டும் என ஈராக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்த நிலையில் அமெரிக்கா சென் றுள்ள ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி வெள்ளை மாளி கையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

அப்போது ஈராக்கில் அமெ ரிக்க போர் நடவடிக்கையை முறையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஈராக் கில் உள்ள அமெரிக்க படைகள் முழுவதுமாக திரும்ப பெறப் படும் என ஜோ பைடன் அறிவித்தார்.‌ அதேசமயம் டிசம்ப ருக்கு முன்பாக ஈராக்கில் அமெ ரிக்க படைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்பதை ஜோ பைடன் தெரிவிக்கவில்லை. ஈராக்கில் தற்போது 2,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment