புதுடில்லி, ஜூலை 28 பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க
முதல மைச்சர் மம்தா, நேற்று பிரதமர் மோடியை டில் லியில் சந்தித்து பேசினார். மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு மம்தா முதல் முறையாக நேற்று (27.7.2021) பிரதமரை சந்தித்துள்ளார். இதற்கு முன்னர் யாஸ் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஒடிசா மற்றும் மேற்குவங்கத்திற்கு பிரத மர் மோடி பயணம் மேற் கொண்டார். அப்போது பிரதமருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள் ளாமல், புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு மம்தா புறப்பட்டுச் சென்ற விவகாரம்
பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது.
தற்போது
நாடு முழு வதும் பெகாசஸ் உளவு விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலை யில், தனது கைப்பேசியும் உளவு பார்க்கப்பட்டுள்ள தாக மம்தா குற்றம் சாட் டினார்.
டில்லிக்கு
3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள மம்தா, காங்கிரஸ் மூத்த தலை வர்கள் சிலரை சந்தித்து பேசிய பின்னர், நேற்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய மம்தா, மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாகவும், கரோனா சூழல், மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் தெரி வித்ததாகவும் கூறினார்.
மேலும்
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென் பொருள் மூலம், நீதித் துறையைச் சேர்ந்தவர் கள், அரசியல் தலைவர் கள், மிக உயர்ந்த பொறுப் புகளில் இருப்போர்கூட கண்காணிக் கப்பட்டுள் ளதாக தெரிவித்த மம்தா, உச்சநீதிமன்றத்தின் கண் காணிப்பில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண் டும் என்றும், இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்
என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment