டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்: மருத்துவ நிபுணர்கள் மதிப்புறு பேராசிரியர்களாக நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்: மருத்துவ நிபுணர்கள் மதிப்புறு பேராசிரியர்களாக நியமனம்

சென்னை, ஜூலை 28- தமிழ்நாடு டாக் டர் எம்ஜிஆர் மருத் துவப் பல்கலைக்கழ கத்தில் மருத்துவ நிபு ணர்கள் நான்கு பேர் வாழ்நாள் மதிப்புறு பேராசிரியராக நியமிக் கப்பட்டுள்ளனர்.

தேவைப்படும் பட்சத்தில் பல்கலைக்கழகத்தில் துறைசார்ந்த மருத்துவ சிறப்பு கருத்துரைகளை அவர்கள் நிகழ்த்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்து வப் பல்கலைக்கழகத்தின் கீழ்

600-க்கும் மேற்பட்ட கல்வி நிறு வனங்கள் இயங்கி வருகின்றன.

இளநிலை, முதுநிலை மருத்து வம், பல் மருத்துவம், செவிலியர் படிப்புகள், மருத்து வம் சார்ந்த பிற படிப்புகள் என நூற்றுக்கணக் கானப் படிப்புகள் அங்கு உள்ளன.

பல்கலைக்கழகத்தில் ஏற் கெனவே ஏழு மருத்துவ நிபுணர் களுக்கு கவுரவப் பேராசிரியர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரு மான டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணரும், மெட்ராஸ் இஎன்டி மருத்துவமனை மேலாண் இயக்கு நருமான டாக்டர் மோகன் காமேஸ் வரன், சர்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணரும், மோகன்ஸ் சர்க்கரை நோய் மருத்துவமனை தலைவருமான டாக்டர் வி. மோகன், சென்னை மருத்துவக்கல்லூ ரியின் மருத்துவத் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் சி. ராஜேந்திரன் ஆகிய நால்வர் புதிதாக மதிப்புறு பேராசிரியராக நியமிக்கப்பட் டுள்ளனர். இதற்கான நியமனத்தை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்மேற்கொண்டு உள்ளார்.

No comments:

Post a Comment