டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் நடைபெற்றுள்ள ஒட்டுக் கேட்பு குறித்து ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் கொண்ட விசாரணை மேற்கொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா உத்தரவிட்டிருப்பது புத்திசாலித் தனமான நடவடிக்கை என தலையங்கச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· பெகாசஸ் பிரச்சினை குறித்து உலகின் பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. ஆனால் இந்திய அரசு மட்டுமே கவலைப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
· மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி மற்றும் உயர்ஜாதியில் வருமானம் குறைந்தோர் இட ஒதுக்கீடு அளிக்கப்படாதது குறித்து பிரதமர் மோடி மேற்கொண்ட மதிப்பாய்வின் அடிப்படையில், இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து விரைந்து செயல்படுமாறு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்.
தி டெலிகிராப்:
· பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் சாதாரண பிரச்சினை அல்ல. இது மிகவும் தீவிரமானது மற்றும் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது. புதிய தகவல் தொழில்நுட்ப அமைச்சரைக் கொண்டு ஓர் அறிக்கையை வாசிப்பதன் மூலம் தான் தப்பிக்க முடியும் என்று பிரதமர் கருதுவது ஒரு நகைச்சுவையாகும். பிற ஜனநாயக நாடுகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன. இந்தியா விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசாங்கம் ஜனநாயக ரீதியாக பதிலளிக்காததால் முட்டுக்கட்டை உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் கவுரவத்தை குறைக்கும் வகையில் அரசாங்கம் செயல்பட்டுள்ளது. இந்தியா ஒரு கண்காணிப்பு நாடாக மாறுவதைத் தடுக்க எதிர்க்கட்சி போராடி வருகிறது என காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment