சீனாவின் 18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பரவல் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

சீனாவின் 18 மாகாணங்களில் டெல்டா வைரஸ் பரவல் அதிகரிப்பு

பிஜிங், ஆக. 3- கரோனா வைரஸ் தொற்றை உல குக்கு வழங்கிய சீனா, இப்போது நடுக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளது. காரணம், டெல்டா வைரஸ். இந்தியாவில் முதன்முத லாக காணப்பட்ட உரு மாறிய கரோனாவான டெல்டா வைரஸ், 100-க்கும் மேற்பட்ட நாடுக ளில் பரவிய நிலையில், சீனாவையும் விட்டு வைக்கவில்லை. சீனாவில் மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18இல் டெல்டா வைரஸ் கால் பதித்து பரவி விட்டது.கடந்த 10 நாட்களில் 300-க்கும் மேற்பட்டோருக்கு அங்கு டெல்டா வைரஸ் தாக்கி இருக்கிறது. இந்த வைரஸ், மிக வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டிருப்பதால் சீனாவுக்கு இதன் பரவல், தலையில் இடியை இறக் கியது போலாகி இருக்கி றது. சீனா அலறிக் கொண் டிருக்கிறது.18 மாகாணங் களில் உள்ள 27 நகரங்கள், பதற்றத்தின் பிடியில் உள் ளன. தலைநகர் பீஜிங், ஜியாங்சு, சிச்சுவான் ஆகிய நகரங்கள், டெல்டா பர வியுள்ள முக்கிய நகரங் கள் என சீன அரசு நாளி தழானகுளோபல் டைம்ஸ்கூறுகிறது.

நாடு முழுவதும் நடுத் தர மற்றும் அதிகளவி லான ஆபத்தான பகுதி களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. பீஜிங் நகரில் புதிதாக 3 பேருக்கு டெல்டா வைரஸ் தாக்கி உள்ளது. மூவரில் ஒருவருக்கு எந்த அறிகுறியும் இல்லை என அந்த நகர செய்தி தொடர் பாளர் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த 3 பேரும் சமீபத்தில் சுற்றுலா நகர மான ஹூனான் மாகா ணத்தின் ஜாங்ஜியாஜி சென்று வந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இந்த நகருக்கு கடந்த வாரம் 11 ஆயிரம் சுற்று லாப்பயணிகள் சென்று வந்திருப்பது அதிர வைத் துள்ளது. அவர்கள் அனை வரும் கரோனா பரிசோ தனை செய்து கொள்ள அறிவுறுத் தப்பட்டுள் ளது.

இந்த நகரில் டெல்டா வைரஸ் பரவியது குறித்து சீனாவின் முன்னணி சுவாச நோய் நிபுணர் ஜாங் நான்ஷன் கவலை தெரிவித்து இருக்கிறார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகு திகளில் இருந்து வருகிற மக்கள், மோட்டார் வாக னங்கள், விமானங்கள், ரயில்கள் தலைநகர் பீஜிங் கில் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் 93 ஆயிரத்து 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதித்து உள்ளது. 4,636 பேர் இறந்துள்ளனர். 1,022 பேர் இன்னும் சிகிச்சை பெறுகின்றனர்.

No comments:

Post a Comment