அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகும் அபாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகும் அபாயம்

வாசிங்டன், ஆக. 3- சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கரோனா வைரஸ் ஓராண் டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டி ருக்கிறது. உலக நாடுகள் பலவும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நட வடிக்கைகளை முன்னெ டுத்து வரும் அதேவேளை யில் பொருளாதார ரீதி யாக ஏற்பட்ட பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளை யும் மேற்கொண்டுள்ளன.

அந்த வகையில், அமெ ரிக்காவில் பெருந்தொற் றுக்கு மத்தியில் வாடகை செலுத்த முடியாது தவித்த அமெரிக்கர்களை அவர்களின் வீட்டிலி ருந்து வெளியேற்ற நாடு முழுவதும் 11 மாதங்க ளுக்கு தடை விதிக்கப் பட்டது. மேலும், மக்க ளுக்கு உதவும் வகையில் வீட்டு வாடகை செலுத்து வதற்காக அரசு பல பில்லி யன் டாலர்களை ஒதுக்கி யது. ஆனால், இந்த நிதியை பயன்படுத்த அந்த நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே, மக்களை அவர்களின் வீட்டிலிருந்து வெளி யேற்ற விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்தது. இதனால், லட்சக்கணக் கான அமெரிக்கர்கள் வீடற்றவர்களாகும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.

முன்னதாக வீட்டிலி ருந்து அப்புறப் படுத்துவ தற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க நாடா ளுமன்றத்திடம் அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த தடை உத்தரவை அக் டோபர் மாதம் வரை நீட் டிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல முயற் சிகளை மேற்கொண்ட னர். ஆனால், குடியரசு கட்சி உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளா ததால் தடையை நீட்டிக் காமலேயே நாடாளுமன் றம் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையேஇந்த பிரச் சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஜனநாயக கட்சி உறுப்பினர் கோரி புஷ் நாடாளுமன்றத்துக்கு வெளியே விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment