ஜெர்மனியில் ஊரடங்குக்கு எதிர்ப்பு: 600 போராட்டக்காரர்கள் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

ஜெர்மனியில் ஊரடங்குக்கு எதிர்ப்பு: 600 போராட்டக்காரர்கள் கைது

பெர்லின், ஆக. 3- ஜெர்மனியில் கரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்து வருகிறதுஇதன் ஒரு பகுதியாக கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இதேபோன்று, ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமை யாக்கப்பட்டு உள்ளன.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயிரத்திற்கும் கூடுதலான போராட்டக்காரர்கள் தெருக் களில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைந்து போகும்படி காவல்துறையினர் கூறினர்.  எனினும், இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டு உள்ளது.  இதில், போராட்டம் நடத்தியவர்களில் 600 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். காவல்துறையினர் 10 பேர் காயமடைந்து உள்ளனர்.

துருக்கி: காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழப்பு - 864 பேர் காயம்

அங்காரா, ஆக. 3- துருக்கியில் மத்திய தரைக்கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் கடந்த வாரம் காட்டுத்தீ ஏற்பட்டது.  இதனால், பலர் தீயில் சிக்கியுள்ளனர்.  இது பற்றி அந்நாட்டின் விவசாய மற்றும் வனத்துறை அமைச்சர் பெகிர் பக்டிமிர்லி கூறும்போது, மனவ்காட் பகுதியில் 7 பேர், மர்மரிஸ் பகுதியில் ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறியுள்ளார்.

இதேபோன்று, மனவ்காட் பகுதியில் 507 பேர், மர்மரிஸ் மற்றும் போட்ரம் பகுதியில் 203 பேர் மற்றும் மெர்சின் பகுதியில் 154 பேர் என மொத்தம் 864 பேர் காயமடைந்து உள்ளனர்.

இவர்களில் மனவ்காட் பகுதியை சேர்ந்த 497 பேர், மர்மரிஸ் மற்றும் போட்ரம் பகுதியை சேர்ந்த 186 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  மெர்சின் பகுதியை சேர்ந்த 154 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment