2ஆவது அலை இன்னும் முடியவில்லை ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

2ஆவது அலை இன்னும் முடியவில்லை ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்

புதுடில்லி, ஆக.4 இந்தியா வில் 2ஆவது அலை இன் னும் முடிவுக்கு வர வில்லை என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கரோனா தொற்று நோய் முடிவுக்கு வருவ தில் இருந்து இன்னும் தொலைவில் தான் இருக்கிறது. இந்தியாவில் 2ஆவது அலையைப் பொறுத்தமட்டில், அது இன்னும் முடிவுக்கு வர வில்லை. உலகளவில் தினசரி பாதிப்பு இன்னும் அதிகமாகவே இருக்கி றது. தினசரி 4.7 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களி லும் உள்ள 44 மாவட்டங் களில் நேற்று முன்தினம் முடிந்த ஒரு வாரத்தில் வாராந்திர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேலாக உள்ளது.

கேரளா, மராட்டியம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் 18 மாவட் டங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வந் துள்ளது.

கடந்த வாரம், கரோனா பாதிப்புக் குள்ளானோ ரில் கிட்டத்தட்ட சரி பாதி அளவிலானவர்கள் (49.85 சதவீதம்) கேரள மாநிலத்தினர் ஆவார் கள்.

கடந்த மே மாதத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண் ணிக்கையைப் போல இரு மடங்கு எண்ணிக்கையிலானவர்கள் ஜூலை மாதம் தடுப்பூசி செலுத் திக்கொண்டிருக் கிறார் கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment