உயர் கல்வி நிறுவனங்களில், வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பை கோரும் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

உயர் கல்வி நிறுவனங்களில், வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பை கோரும் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா?

மக்களவையில் எஸ். ஜெகத்ரட்சகன், எம். பி. கேள்வி

புதுடில்லி, ஆக. 4- திராவிட  முன்னேற்றக் கழக அரக் கோணம் நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்கள் 2.8.2021, அன்று மக்களவையில், உயர் கல்வியை மேம்படுத்தும் திட்டங்கள் என்னென்ன? என்றும், வளைகுடா நாடுகளின் மாணவர் களை இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க் கும் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா? என்றும் ஒன்றிய கல்வி அமைச்சர், தர்மேந்திர பிரதான், அவர்களிடம், விரிவான கேள்வியை எழுப்பினார்.

ஒன்றிய கல்வி அமைச் சர் அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு:

வெளிநாட்டு மாண வர்களை, இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் அதிகமாக சேர்க்கும் வகை யிலும், உயர் கல்வியில் வெளிநாடுகளின் ஒத்து ழைப்பை அதிகரிக்கும் வகையிலும், ஒன்றிய அரசு அனைத்து முயற்சி களையும் எடுத்து வருவ தாகவும், 2017ஆம் ஆண் டில் துவக்கப்பட்ட, உல கத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனத் திட்டத்தின் கீழ், வெளியுறவுத்துறை, உள்துறை மற்றும் கல்வி அமைச்சகத்தின் பரிந்து ரையோடு, சிறப்புறு நிறு வனங்களை துவக்கி வெளி நாட்டு மாணவர்களை சேர்க்க, தனியார் கல்லூ ரிகள் ஊக்குவிக்கப்படு கின்றன என்றும், கல்வி அமைச்சர், மக்களவை யில் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஏப்ரல் 2018இல் துவக்கப்பட்டஇந்தியாவில் படிப் போம்திட்டத்தின்படி, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் உள்ள 45 நாட்டின் மாணவர்களும் ஓமன், ஈராக், குவைத், அய்க்கிய அரபுக் குடியரசு மற்றும் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாட்டின் மாணவர்களும் இந்தியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக வும், அரக்கோணம் திமுக நாடாளுமன்ற உறுப்பி னர், டாக்டர்  எஸ். ஜெகத் ரட்சகன் அவர்கள், மக்க ளவையில், எழுத்து மூலம் எழுப்பிய கேள்விக்கு  ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  அவர்கள் விரிவான பதிலை அளித்துள்ளார்.

No comments:

Post a Comment