சண்டிகர், ஆக. 4- அரியானா மாநில முன்னாள் முதல மைச்சர் சவுதாலாவை நிதிஷ்குமார் சந்தித்தார். சவுதாலா 3ஆவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இச்சந்திப்பு நடந்துள் ளது. அரியானா மாநில முன்னாள் முதலமைச் சரும், இந்திய தேசிய லோக்தளம் தலைவரு மான ஓம்பிரகாஷ் சவு தாலா ஊழல் வழக்கில் சிறைத்தண்டனைக்குப் பின்னர் விடுதலை ஆனார்.
தேசிய அளவில், பா. ஜ.க, காங்கிரசுக்கு மாற் றாக 3ஆவது அணி அமைக் கும் முயற்சியில் ஈடுபடப் போவதாக கடந்த வாரம் அறிவித்தார். செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் எதிர்க் கட்சி தலைவர்களை சந்தித்து 3ஆவது அணி பற்றி பேசப்போவதாக அவர் கூறினார். பீகார் மாநில முதலமைச்சரும், அய்க்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், ஆகஸ்டு 1ஆம் தேதி தன்னை சந்திப்பார் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், குர்கா னில் உள்ள சவுதாலா வீட்டுக்கு நிதிஷ்குமார் நேற்று முன்தினம் (1.8.2021) சென்றார். அவ ருடன் அய்க்கிய ஜனதா தள பொதுச்செயலாளர் கே.சி.தியாகியும் சென் றார். இருவரும் சவுதா லாவை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அர சியல் விவகாரங்கள் குறித் தும் பேசினர். சவுதாலா வுடன் இருவரும் மதிய உணவு சாப்பிட்டனர். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து பீகாரில் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் நிதிஷ்குமார் 3ஆவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சவுதாலாவை சந்தித்துள் ளது பாஜக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

No comments:
Post a Comment