விமான விபத்தில் இறந்ததாக கருதப்பட்டவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

விமான விபத்தில் இறந்ததாக கருதப்பட்டவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பினார்

கொல்லம் ஆக 4- கேர ளாவை சேர்ந்த ஒருவர் விமான விபத்தில் இறந் ததாகக் கூறப்பட்டு 45 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளார்.

கேரளாவில் உள்ள கொல்லத்தைச் சேர்ந்த சஜ்ஜத் தங்கல் 1970களில் வளைகுடா நாடுகளில் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.  கடந்த 1976 ஆம் ஆண்டு அக் டோபர் மாதம் விமானம் மூலம் மும்பை வர சஜ்ஜத் திட்டமிட்டிருந்தார்.   ஆனால் கடைசி நேரத் தில் அவரது பயணம் ரத் தானதால் அந்த விமா னத்தில் அவர் வரவில்லை.

அவர் வருவதாக இருந்த விமானம் விபத்துக்குள் ளாகி சுமார் 95 பேர் மர ணம் அடைந்தனர்.  அவர் களில் சஜ்ஜத் ஒருவர் என குடும்பத்தினர் கருதினர்.  இந்த விபத்தில் சஜ்ஜத் தின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் இறந்த தால் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. 

மும்பை திரும்பிய சஞ்ஜத் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு நினைவு திரும்பியது.  தற்போது சுமார் 70 வயதாகும் அவர் கொல்லத்தில் உள்ள தனது 91 வயது தாயுடன் தொலைப்பேசியில் தன் னார்வு தொண்டு நிறுவன உதவியுடன் பேசி  உள் ளார்.  

அதன் பி|றகு கடந்த சனிக்கிழமை கொல்லத் துக்கு வந்தார்.   சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சஜ்ஜத் வீடு திரும்பி குடும் பத்துடன் இணைந்து உள்ளார்.

No comments:

Post a Comment