புதுடில்லி, ஆக. 4- அரியானா மாநிலம், குருகிராமில் அரியானா சட்ட சேவை கள் ஆணையத்தால் ‘அனைவருக்கும் நீதி கிடைப்பதில் சேவை களின் தரம் முக்கியமா னது’ என்ற தலைப்பில் ஓராண்டு கால பிரச்சார இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சார இயக் கத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் நேற்று முன்தினம் (1.8.2021) தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறி யதாவது:-
ஒரு குற்றவாளி சட் டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவருக்கு எதி ராக நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும். ஒரு குற்றவாளி, தான்செய்த குற்றத்துக்காக தண்டிக் கப்பட வேண்டும். இதெல்லாம் உண்மை தான். அதே நேரத்தில், அந்த குற்றவாளி தன்னை தற்காத்துக்கொள்வதற்கு (தன் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறுவதற்கு) எல்லா வாய்ப்புகளையும் வழங்குவது ஒழுங்கமைக் கப்பட்ட ஒரு சமூகத்தில் அனைவரின் கடமையாக அமைந்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஒட்டுமொத்த மனித குலமும் பின்னடைவைச் சந்தித்தது. அந்த நேரத் தில் காணொலி காட்சி தளம், தீர்வுக்கான தள மாக அமைந்தது.எல்லா தொடர்புகளும், அது அரசு அலுவலகங்களாக இருக்கட்டும் அல்லது பிற அமைப்புகளாக இருக் கட்டும், ஏன் பொழுது போக்கு மற்றும் பிறவற் றிலும்கூட பெருந் தொற்று நிலைமை அல்லாட வைத்தது. ஆனால் இந்த நிலைமை நம்மை மேம் படுத்திக் கொள்வதற்கும், புதுமைகளை புகுத்துவ தற்கும் நமக்குள் உள்ள சிறப்பானவற்றை வெளிப்படுத்துவதற்கும் கற்றுத்தந்தது.
காணொலி தளம், தீர் வுக்கான தளமாக செயல் பட முடியும், பல பிரச்சி னைகளைத் தீர்க்க முடி யும் என்பதை கரோனா காலம் எங்களுக்கு கற்றுத் தந்தது. இன்றைக்கு எல்லா நீதிமன்றங்களும் காணொலி வழியாக இயங்குகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment