அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
சென்னை, ஆக.5 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 13ஆம் தேதி தாக்கல் ஆகிறது. மேலும் பொறியியல் உள்ளிட்ட தொழிற் கல்விப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடம் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நேற்று (4.8.2021) காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது.
2.15 மணிநேரம் நீடித்த அமைச் சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அய். பெரியசாமி, க.பொன்முடி உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நிதிநிலை அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை, சட்டமன்றத்தில் தாக் கல் செய்யப்படும் என்று ஏற் கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி, வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை, நடப்பு கூட்டத் தொடரிலேயே சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆணையத்தின் அறிக்கை
கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழில் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது. எனவே அரசுப் பள்ளி மாணவர்கள், தொழில் கல்வி படிப்பதற்குத் தடை யாக உள்ள காரணிகள் என்ன வென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்யவும், டில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணை யம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கையை அரசு பெற்றுள்ளது.
அந்த ஆணையத்தின் பரிந்து ரைகளை ஏற்று, அதனைச் செயல் படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மற்ற தொழில் கல்விப் படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
13 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை
9 ஆம் தேதி வெள்ளை அறிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை வரும் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதனை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி யேற்றபிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது.
மேலும், 9 ஆம் தேதி, 120 பக்கங் கள் கொண்ட நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும், அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய் யப்பட்ட பிறகு அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு முடிவு செய்வார்.
வேளாண் பட்ஜெட் தேதி குறித் தும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது. இந்தத் தேதி பின்னர் வெளி யிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment