"பெகாசஸ்" உளவு விவகாரம்: மீண்டும் ஒத்தி வைப்புத் தீர்மானம் மாணிக்கம் தாக்கூர் கொண்டுவந்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

"பெகாசஸ்" உளவு விவகாரம்: மீண்டும் ஒத்தி வைப்புத் தீர்மானம் மாணிக்கம் தாக்கூர் கொண்டுவந்தார்

 புதுடில்லி ஆக 3- பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் ஒத்தி வைப்பு தீர்மானம் தாக்கீது அளித் துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரு கிறது. இதற்கிடையில், தொலை பேசி ஒட்டுக்கேட்பு விவகாரமான பெகாசஸ் விவகாரம். வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி  எதிர்க் கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கி உள் ளன. இருந்தாலும், இடையிடையே அமளிகளுக்கு இடையில் நடை பெற்றுவருகிறது, சில மசோதாக் களும் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று மக்க ளவை கூடியதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து விவாதிக்கவும், உச்ச நீதி மன்றத்தின் மேற்பார்வையில் விசா ரணை நடத்தவும் கோரிக்கை விடுத்து ஒத்திவைப்பு தீர்மான அறிவிக்கையை அளித்தார்.

இந்த அறிவிக்கை பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னி லையில் அளிக்கப்பட்டது.

முன்னதாக ஏற்கெனவே  மக்க ளவையில் காங்கிரஸ் உறுப்பி னர்கள் மனீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான அறிவிக்கையை அளித்த னர். ஆனால், அதுகுறித்து விவா திக்க இதுவரை நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் அனுமதிக் கவில்லை என்பது குறிப்பிடத்தக் கது.

No comments:

Post a Comment