சென்னை, ஆக. 3- பள்ளி மாணவிய ருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாமியார் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு வழக்கில் சிபிசிஅய்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
கேளம்பாக்கம் அடுத்த சாத்தங் குப்பத்தில் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிர்வாகி சாமியார் சிவசங்கர் பாபா (வயது 72). இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பலர் அதன் நிறுவனர் சிவசங்கர் பாபாமீது அளித்த பாலியல் புகா ரின்படி, காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.
10 மற்றும் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பொது தேர்வுக்கு முன்பும், பிற ஆன்மிக நிகழ்வு நாட்களிலும் சிவசங்கர் பாபாவிடம் ஆசிர்வாதம் பெற் றால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்று பள்ளியின் ஆசிரியைகள் கூறி அழைத்து செல்வார்கள். அப் போது மாணவிகளை சிவசங்கர் பாபா ஆசிர்வாதம் என்ற பெயரில் தனிதனியாக தனது அந்தரங்க அறைக்கு அழைத்து சென்று, பாலியல் வன்முறை, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அறையில் வெளி நாட்டு மதுபானங்கள், சாக்லெட்டு களை கொடுத்து பாலியல் தொந் தரவு செய்து வந்ததும்தெரிய வந்தது.
15 ஆண்டுகளாக 500க்கும் மேற் பட்ட மாணவிகளை சிவசங்கர் பாபா சீரழித்து இருப்பதும் விசா ரணையில் தெரியவந்தது. மாண விகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏற்கெனவே 2 வழக்குகளில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது அடுத்தடுத்து போக்சோ வழக் குகள் போடப்பட்டு கைது நட வடிக்கையை சிபிசிஅய்டி காவல் துறையினர் மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில் 3ஆவது போக்சோ வழக்கில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். 3ஆவது வழக்கில் கைதான சாமியார் சிவ சங்கர் பாபா செங்கல்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
No comments:
Post a Comment