ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·       பெகாசஸ் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முன்னெடுப்பில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றம் நோக்கி சைக்கிளில் சென்றது, ஒற்றுமையின் துவக்கமாக இருக்க வேண்டும் என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·       மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27 சதவீதம் அல்ல, 50 சதவீத இடங்களை ஓபிசி பிரிவினர்க்கு ஒதுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·       இட ஒதுக்கீட்டில் மொத்த இடஒதுக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், மேலும் ஓபிசியினருக்கு மட்டும் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது மராத்தா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது என ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறிய கருத்துக்கு, அப்படி என்றால் தற்போது .டபிள்யூ.எஸ். பிரிவினர்க்கு 10 சதவீதம் அளிப்பதன் மூலம் அது மீறப்பட்டுள்ளதே என தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி ஆதிகேசவலு அடங்கிய முதல் அமர்வு கேள்வி எழுப்பியது.

தி டெலிகிராப்:

· பெகாசஸ் ஒட்டுக் கேட்பு குறித்து விசாரிக்க எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

· எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவதாக உறுதியளிக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பல அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன, அங்கு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்கள்...

- குடந்தை கருணா

No comments:

Post a Comment