சென்னை, ஆக.8 குழந் தைகளை கரோனா தொற் றில் இருந்து பாதுகாப் பதற்கான ஆலோசனை களை வழங்க 13 அதி காரிகளைக் கொண்ட மாநில பணிக்குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகா தாரம் மற்றும் குடும்பநலத் துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை யின் கூடுதல் இயக்குநர், குழந்தைகளுக்கான கரோனா தொற்று கவனிப்பு தொடர்பாக மாநில அளவில் பணிக் குழுவை அமைக்க வேண் டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண் டுள்ளார்.
மாநிலத்தில் ஏற்கென வே நியமிக்கப்பட்டுள்ள கரோனா தொற்றுக்கான மாநில குழுவின் துணைக் குழுவாகவும் செயல்பட முடியும்.
அந்த வகையில், குழந் தைகளுக்கான கரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் கவனிப்பு தொடர் பாக மாநில அளவிலான பணிக்குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழு தொற்று தடுப்பு, சிகிச்சை, ஆய்வு தகவல்கள் மற்றும் அதன் தொடர் புடைய ஆலோசனை களை அரசுக்கு
அளிக்கும்.
இந்த பணிக்குழுவின் தலைவராக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை முதன்மைச் செயலாளர் இருப்பார். குழந்தைகள் நலன் நிறுவனம் மற்றும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர், இந்த குழுவின் உறுப்பினர் செயலாளராக இருப்பார்.
தேசிய சுகாதார திட்ட இயக்குனர், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக் குநர், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குநர், சென்னை ஸ்டான்லி அரசு மருத் துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றின் குழந்தை கள் நல துறைத் தலை வர்கள், இந்திய குழந்தை கள் நலன் அகடமியின் தமிழ்நாடு பிரிவு தலைவர் மற்றும் செயலாளர், திருச்சி மாவட்ட பிரிவு செயலாளர் டாக்டர் ஏ.தங்கவேலு ஆகிய 12 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment