புதுடில்லி, ஆக.3 டெல்டா பிளஸ் கரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என அய்சிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்துள்ள கோவேக்சின் தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியானது, டெல்டா வகை கரோனாவுக்கு அறிகுறிகள் இல்லாமல் தடுப்பதில் 77.8 சதவீதம் செயல் திறன் மிக்கது ஆகும்.
இந்த நிலையில், டெல்டா பிளஸ் கரோனாவுக்கு எதிராக வும் கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என அய்சி எம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது.
இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக் குள் செல்லும் திறன் கொண்டது. இந்தியா உள்ளிட்ட நாடு களில் இதனால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். இதுகுறித்த ஆய்வும் தீவிரமடைந்து வருகிறது. இந்த வகை டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக அய்சிஎம்ஆர் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதன் முதலாக கண்டறியப்பட்ட டெல்டா பிளஸ் கரோனா 20 நாடுகளில் பரவியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெகாஸஸ்
பிரச்சினையை விவாதிக்க வேண்டும்
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள
நிதிஷ் குமார் வலியுறுத்தல்
பாட்னா, ஆக.3 தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள கருத்தால் கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெகா ஸஸ் விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என பிகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து நிதிஷ்குமார் கூறியதாவது:-
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கும் துன்புறுத்து வதற்காகவும் இத்தகைய செயல்களை செய்யக்கூடாது. இது குறித்து முழு விவரமும் வெளிப்படுத்த வேண்டும். பெகா ஸஸ் விவகாரம் குறித்து உண்மை நிலையை அறிய நாடா ளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பத்தை மக்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க விசாரணை மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவ தால் இந்த விவகாரத்தை விவாதிக்கலாம்“ எனத் தெரிவித்தார். நிதிஷ்குமாரின் இந்த கருத்து பாஜகவுக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment