சென்னை, ஆக.8- வடசென்னை மாவட்டம், பெரம்பூர் - செம்பியம் திராவிடர் கழகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் மூன்றாமாண்டு நினைவு நாளில் (7.8.2021) காலை 8.30 மணிக்கு செம்பியம் பேப்பர் மில்ஸ் சாலையில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கலைஞரின் படத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் மாலை அணிவித்தார். கலைஞரின் நினைவைப் போற்றும் முழக்கங்கள் ஒலிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், செம்பியம் தலைவர் பா.கோபாலகிருட்டிணன், செயலாளர் டி.ஜி.அரசு, கு.சவுந்தரராசன் (திமுக), 68ஆவது வட்ட திமுக துணைச் செயலாளர் ஏ.அண்ணாதுரை, பகுதி பிரதி
நிதிகள் எஸ்.ஏ.கபூர், ஏ.லாசர், பெத்துநாயக்கன்பேட்டை இராசேந்திரன், கேப்டன் இரமேசு, மங்களபுரம் டில்லிபாபு, சங்கர், செல்வம், தேவராசன், நாகலிங்கம் மற்றும் எஸ்.ஜே.சாதிக்பாட்சா நினைவு மன்றத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment