115 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.101 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

115 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.101 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

சென்னை, செப். 29- தமிழ்நாட்டில் 115 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் ரூ.101 கோடிக்குவரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள் ளது என்று வணிக வரி, பதிவுத் துறைஅமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

சென்னையில் வணிக வரித் துறை அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் அமைச் சர் பி.மூர்த்தி கூறியதாவது:

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஜவுளித் தொழில் செய்பவர்கள் உள்ளீட்டு வரியை அரசுக்கு குறைத்து செலுத்துவது தெரியவந்துள் ளது. இதனால் உண்மையான நிலவரத்தை அறிவதற்காக, துறை செயலர், ஆணையர் உத்தரவின்பேரில், 115 இடங் களில் 200-க்கும் மேற்பட்ட வணிக வரி அதிகாரிகள் மூலம் தொடர்ந்து 14 நாட்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில், பல இடங்களில் பொருட்களை வாங்கி, மக்க ளிடம் விற்கும்போது உள் ளீட்டு வரியை அரசுக்கு செலுத் தாமல் வரி ஏய்ப்பு நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு தொடர்ந்து நடந்துவருகிறது. இதுவரை நடந்துள்ள ஆய்வில் முதல் கட்டமாக, அரசுக்குசெலுத்த வேண்டிய வரி ரூ.101.49கோடி வரை ஏய்ப்பு செய்யப்பட்டி ருப்பது கண்டறியப்பட்டுள் ளது.

நாளுக்கு நாள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் எண்ணிக்கை அதிரித்து வருகிறது. இதை தடுக்க துறைரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வணிகமே செய் யாமல் போலி ரசீது மூலம் வணிகம் செய்வதாக காட்டு பவர்கள், வரி ஏய்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படு கிறது.

இதுகுறித்து முதலமைச் சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங் களின் உரிமத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருக் கும் அதிகாரிகள் மீதும் நட வடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை, பெயரளவில் ஜிஎஸ்டி எண் வாங்கிக்கொண்டு, தொழில் செய்யாமல் முறை கேட்டில் ஈடுபட்ட 400 பேர் வரை கண்டறியப்பட்டு, ஜி எஸ்டி எண் ரத்து செய்யப் பட்டுள்ளது. இவர்களிடம் ரசீது பெற்ற பெரிய நிறுவனங் கள் குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது.

சில பெரிய நிறுவனங்களில் ஆய்வு நடத்தும்போது, ஆவ ணங்கள் மறைக்கப்படுகின்றன. இதற்காக ஆய்வுக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம். ஒரேஇடத்தில் பணியாற்றி வரும் 55 அதிகாரி கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். பதிவுத் துறையிலும் முறைகேடுகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள் ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

No comments:

Post a Comment