மோடியை ‘நியூயார்க் டைம்ஸ்’ பாராட்டியதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

மோடியை ‘நியூயார்க் டைம்ஸ்’ பாராட்டியதா?

போட்டோஷாப் வேலை செய்து வழக்கம்போல அசிங்கப்பட்ட பா...வினர்பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சிஇஓ-க்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரைச் சந்தித்தார். இந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவு குறித்து பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தினார்

அதேநேரம், மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளை மாளிகை முன்பு அமெரிக்க வாழ் இந்தியர்கள்மோடியே திரும்பிப் போ! (‘Go Back Modi') என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்தன. இந்தியாவில் அரங் கேறும் மனித உரிமை மீறல்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தல்கள், விவ சாயிகளுக்கு எதிரான பண்ணைச் சட்டங்கள் மற்றும் காஷ்மீரிகள் மீதான அடக்கு முறைகள் மூலம் பாசிஸ்ட் ஹிட்லரின் மறுவடிவமாக மோடி உருவெடுத்துள்ளார். அவரை, ஜோ பைடன் சந்திப்பது, அமெரிக்க ஜனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது என்று முழக்கங் களையும் அவர்கள் எழுப்பினர்.

ஆனால், மோடியின் வருகையை யொட்டி அமெரிக் காவின் பிரபல நாளிதழானநியூயார்க் டைம்ஸ்’, தனது முகப்புப் பக்கத்தில்பூமியின் கடைசி, சிறந்த நம்பிக்கை: உலகில் அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும், மிகவும் சக்தி வாய்ந்த தலைவர், நம்மை ஆசிர்வதிப்பதற்காக அமெரிக்கா வந்திறங்கினார்; உலகின் மீட்பர் வந்து உள்ளார்என கடந்த செப்டம்பர் 26 அன்று செய்தி வெளியிட்டதாக சமூக வலை தளங்களில் ஒளிப்படங்கள் வெளியாகின.

பாஜக மற்றும் சங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஒளிப்படங்களை முகநூல், டுவிட்டர் வலை தளங்களில் வேகவேகமாக பகிர்ந்தனர்.

பிரதமர் மோடி உலகத் தலைவராகி விட்டார் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கூப்பாடு போட்டார்.  எனினும், ‘நியூயார்க் டைம்ஸ்மோடியை பாராட்டியது உண்மை தானா? என்ற சந்தேகங்களும் பல ருக்கு எழுந்தன.

மத அடிப்படையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், கரோனா தொற்றைத் தவறாக கையாண்டது, விவசாயிகளுக்கு எதிரான பண்ணைச் சட்டங்களில் பிடிவாதம் காட்டுவது போன்றவற்றைக் குறிப்பிட்டு, ‘நியூயார்க் டைம்ஸ்போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் பிரதமர் மோடியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தவை.

அப்படியிருக்க, திடீரென அவை எவ்வாறு பாராட்டின? என்று கேள்விகள் எழுந்தன. இதையடுத்து, செய்தியின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு மேற் கொண்டபோது, “பிரதமர் மோடியை உலகின் மிகவும் விருப்பமான தலைவர் மற்றும் சக்திவாய்ந்த தலைவர்எனநியூயார்க் டைம்ஸ்எந்த செய்தியும் வெளியிட வில்லை; சொல்லப் போனால், மோடி குறித்து ஒரு செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந் துள்ளது. மேலும், இவை சங்-பரிவார் கூட்டத்தின் போட் டோஷாப் வேலைகள்தான் என்பதும் அம்பலமாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, போட்டோஷாப் செய்த பரிவாரங்கள், அந்த வேலையையும் வழக்கம்போல அரைகுறையாக செய்து, தங்களைத் தாங்களே காட்டிக் கொடுத்துள்ளனர். மோடி பாராட்டப்பட்டதாக வெளி யான இரு ஒளிப்படங்களிலும்செப்டம்பர்’ (SEPTEM BER) என்ப தற்குப் பதிலாகசெட்பெம்பெர்’ (SETPEM BER)  எனவும், ‘மீட்பர் வருகிறார்என்ற பொருள்படும்மெஸையா அரைவ்ஸ்’ (Messiah Arrives) என் பதை ஆங்கிலத்தில் எழுத்துப் பிழையாக ‘Messaih’எனaஎன்ற எழுத்தை இடமாற்றிப் போட்டும் அசிங்கப்பட்டுள் ளனர்.  அது மட்டுமல்ல, தேதியையும் அவர்கள் மாற்ற வில்லை. நவம்பர் 9, 2016 அன்றைய நாளில் வெளியானநியூயார்க் டைம்ஸ்' இதழை எடுத்துக் கொண்டுதான் போட்டோ ஷாப் செய்துள்ளனர்.

ஆனால், அதில் தேதியை மாற்றவில்லை. மேலும், ஒளிப்படங்களில் இருந்த எழுத்துருவும்(font)  நியூயார்க் டைம்ஸ்சின் எழுத்துரு கிடையாது. இவையனைத்தும் சேர்ந்து, தற்போது பாஜக கூட்டத்தின் போட்டோஷாப் மோசடி வேலையை ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொடுத்து விட்டது.

நன்றி: ‘தீக்கதிர்', 29.9.2021

No comments:

Post a Comment