பாட்னா, செப். 29- பாலியல் துன்பு றுத்தல் குற்றச்சாட்டுக்கு உள் ளானவருக்கு பிணை வழங்க, சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள பெண்களின் துணிகளை துவைத்து சலவை செய்ய உத் தரவிட்ட பீகார் கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு வழக்குகளை விசா ரிக்க பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘மதுபனி மாவட்டத்தில் உள்ள ஜன் ஜார்பூரில் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமார், அடுத்த உத்தரவு வரும் வரை வழக்கு விசாரணைகளில் ஈடுபடக் கூடாது’ என்று உத் தரவிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த லலன் குமார் என்பவர் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி இரவு பெண் ஒருவரை பாலியல் வன் கொடுமை செய்ய முயன்றார். இதுகுறித்து அந்தப் பெண் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படை யில் லலன் குமார் கைது செய் யப்பட்டார். தனக்கு பிணை அளிக்கக் கோரி லலன்குமார் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு அண் மையில் விசாரணைக்கு வந்த போது தனது தவறுக்கு லலன் குமார் மன்னிப்பு கோரினார். இதையடுத்து சிறையில் அவ ரின் நன்னடத்தையைக் கருத் தில் கொண்ட நீதிபதி அவி னாஷ் குமார், கிராமத்தில் 6 மாதங்களுக்குள் 2,000 பெண் களின் ஆடைகளை லலன் குமார் சலவை செய்து தர வேண்டும் என்ற நிபந்தனை யின் அடிப்படையில் பிணை அளித்து உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியது.
இதற்கு முன்பும் நீதிபதி அவினாஷ் குமார் பல்வேறு வழக்குகளில் வழங்கிய உத்தர வுகள் நீதித்துறையின் புரு வத்தை உயரச் செய்துள்ளன.
இம்மாதம் மற்றொரு வழக் கில், உணவு தானியங்களைப் பதுக்கிய ஒருவருக்கு பிணை அளித்த உத்தரவில், அந்த நபர் பருப்பு மற்றும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று நீதி பதி அவினாஷ்குமார் கூறினார்.
உரிய லைசென்ஸ் இன்றி துப்பாக்கி வைத்திருந்த கட்ட டப் பணியாளர் தொடர்பான மற்றொரு வழக்கில் உள்ளூர் கோயிலில் அவர் சேவையாற்ற வேண்டும் என்று அவர் உத் தரவிட்டார்.
தாக்குதல் வழக்கில் சிக்கிய பால் வணிகர்கள் இருவருக்கு பிணை வழங்கிய உத்தரவில், அவ்விருவரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்களுக்கு அரை லிட்டர் பால் இலவச மாக அளிக்குமாறு நீதிபதி கூறினார்.
No comments:
Post a Comment