சென்னை, செப். 29 பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு 27.9.2021 அன்று தொடங்கியது. அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
பொறியியல் படிப்பு களில் சேருவதற்கு ஒவ் வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடத் தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஒரு லட் சத்து 51 ஆயிரம் இடங்க ளுக்கு கலந்தாய்வு கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி நடக்கிறது.
முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு, மாற்றுத் திறனா ளிகள், மேனாள் படை வீரர் களின் குழந்தைகள், விளை யாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கி கடந்த 24ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தக் கலந்தாய்வு மூலம் 6 ஆயி ரத்து 442 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டு விட்டன.
இதன் தொடர்ச்சியாக பொதுப் பிரிவு மாணவர்க ளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெற இருக்கும் இந்த கலந்தாய் வில், தரவரிசை பட்டியலில் 1 முதல் 14 ஆயிரத்து 788 வரை உள்ள மாணவர்க ளுக்கு முதல் சுற்று கலந் தாய்வு தொடங்கியது. வரு கிற 5ஆம் தேதி வரை இவர் களுக்கு கலந்தாய்வு நடை பெறும்.
அதன்பிறகு 14 ஆயிரத்து 789 முதல் 45 ஆயிரத்து 227 வரை தரவரிசையில் உள்ள வர்களுக்கு 2ஆம் சுற்று கலந்தாய்வு வருகிற 1ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து 3ஆம் சுற்று கலந்தாய்வு 5ஆம் தேதியும், 4ஆம் சுற்று கலந்தாய்வு 9ஆம் தேதியும் தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி பொது கலந்தாய்வு அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை நடக்கி றது.
இதேபோல், தொழிற் கல்வி பிரிவு மாணவர்க ளுக்கும் நேற்று கலந்தாய்வு தொடங்கி உள்ள நிலையில், வருகிற 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கலந்தாய்வில் மாணவர்கள் முதலில் முன்பணம் கட்டு வதற்கும், அதன்பின்னர் கல் லூரிகளை தேர்வு செய்வ தற்கும் போதிய அவகாசம் வழங்கப்பட்டு, அதையடுத்து தற்காலிக ஒதுக்கீடும், அதில் விருப்ப கல்லூரியை உறுதி செய்யும் மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை யும் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment