நைஜீரியாவில் கும்பல் தாக்குதல்: 34 கிராமவாசிகள் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

நைஜீரியாவில் கும்பல் தாக்குதல்: 34 கிராமவாசிகள் பலி

லாகோஸ், செப். 29- நைஜீரியாவின் வடமேற்கே கடுனா பகுதியில் கவுரா நகரில் மடமய் கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்இந்த சம்பவத்தில் 34 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  7 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த தாக்குதலின்போது, சில வீடுகளுக்கும் அந்த கும்பல் தீ வைத்து எரித்து உள்ளது.  இதுபற்றி அறிந்த அரசு படை நிகழ்விடத்துக்கு சென்று பதில் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.

இதன்பின்னர் எரிந்து கொண்டிருந்த 3 வீடுகளின் தீயை அணைத்தனர்.  6 பேரையும் மீட்டனர்.  இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்தும்படி அரசு உத்தரவிட்டது.

2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நைஜீரியாவில் கடந்த சில மாதங் களாக துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தி வரு கின்றனர்.  இதில் பலர் கொல்லப்பட்டும் மற்றும் கடத்தப் பட்டும் உள்ளனர்.

சீனாவில் கனமழை, நிலச்சரிவு;

ஏழு பேர் உயிரிழப்பு

பெய்ஜிங், செப். 29- சீனாவில் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கே டையான்குவான் கவுன்டி பகுதியில் லபாஹே என்ற நகரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.  இதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 17 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.  பலர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.  அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  7 பேர் உயிரிழந்து உள்ளனர்.  2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, சிச்சுவான் மாகாணத்தின் பல் வேறு நகரங்களில் இருந்து டையான்குவான் பகுதிக்கு 400க்கும் மேற்பட்ட நபர்கள், தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 140 பேர் இடி பாடுகளை அகற்றும் பணிக்கு சென்றனர்.  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

No comments:

Post a Comment