நியூயார்க், செப். 29- அமெரிக் காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப் பிறந்தவர், சுக்பீர் தூர். 26 வயதாகும் இவர், அமெ ரிக்க கடற்படையில் லெப் டினன்ட் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தமது மத வழக்கப் படி தலைப்பாகை (டர் பன்) அணிய அனுமதிக்க வேண்டும் என்று அதி காரிகளிடம் கோரினார். ஆனால் ஆரம்பத்தில் அவர்கள் அதற்கு அனு மதி அளிக்கவில்லை.
இந்நிலையில் சுக்பீர் தூர் பணியின்போது தலைப்பாகை அணிய அனுமதிக்கப் பட்டுள் ளது. அமெரிக்க கடற் படையின் 246 ஆண்டு கால வரலாற்றில், அதன் வழக்கத்தைத் தாண்டி இவ்வாறு தலைப்பாகை அணிய அனுமதிக்கப்பட் டுள்ளது இதுவே முதல் முறை. அதேநேரம், சீக் கிய அதிகாரி சுக்பீர் தூருக்கு சில கட்டுப்பாடு களும் விதிக்கப்பட்டுள் ளன. அவர் சாதாரண பணியின்போது தலைப் பாகை அணிந்திருக்க லாம். ஆனால் சண்டை நடக்கும் பகுதியில் பணி புரியும்போதோ, நிகழ் வுகளின்போதோ தலைப் பாகை அணியக் கூடாது.
தனக்கு விதிக்கப் பட் டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று தமது பிரிவு தலைமைக்கு விண்ணப்பித்துள்ள சுக்பீர், முழுமையான அனுமதி அளிக்கவில்லை என்றால் வழக்குத் தொட ருவேன் என்று கூறியுள் ளார். அமெரிக்க ராணு வம் மற்றும் விமானப் படையில் தற்போது சுமார் 100 சீக்கியர்கள் பணியாற்றி வருகிறார் கள். அவர்கள் தாடி வைத்துக்கொள்ளவும், தலைப்பாகை கட்டவும் அனுமதிக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக் கது.
No comments:
Post a Comment