அங்காரா, செப். 29- உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண் ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கரோனாவால் பாதிக்கப் பட்ட நாடுகளில் துருக்கி தற்போது 6-ஆவது இடத் தில் உள்ளது.
இந்நிலையில், துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,188 பேர் கரோனா வைர சால் பாதிப்பு அடைந்துள் ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 70,66,688 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 206 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 372 ஆக அதி கரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 65 லட்சத்து 22 ஆயிரத்து 435 பேர் குணமடைந் துள்ளனர். தற்போது கரோனா பாதிப்புடன் 4,80,881 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந் நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
துருக்கியில் தற்போது சீனாவின் சினோவாக் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு அதிகா ரிகள் ஒப்புதல் அளிக்கப் பட்டு அங்குள்ள மக்க ளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 53.55 மில்லிய னுக்கும் அதிகமான மக் கள் முதல் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். 43.81 மில் லியனுக்கும் அதிகமான வர்கள் தங்கள் இரண்டா வது டோஸ் மருந்தை பெற்றுள்ளனர். துருக்கி இதுவரை பூஸ்டர் டோஸ்களுடன் சேர்த்து 108.3 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment