நியூயார்க், செப். 29- அய்.நா. சபையின் 76-ஆவது பொதுக்கூட்டம் கடந்த 14ஆ-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி உள் ளிட்ட பல்வேறு தலைவர் கள் அய்.நா. பொதுசபை யில் உரையாற்றியுள்ளனர்.
இந்நிலையில், அய்.நா. பொதுசபை கூட்டத்தில் வடகொரியா சார்பில் அந்நாட்டு தூதர் கிம் சாங் பகேற்றார்.
அப்போது அவர் பேசியதாகவது, அணு ஆயுதம் கொண்ட நாடு ஆயுதங்களை பரிசோ திக்க உரிமை உள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது. எங்களை நாங் கள் பாதுகாத்துக்கொள் வதற்காகவும், நாட்டில் அமைதி மற்றூம் பாது காப்பு நிலவவும் எங்கள் தேசிய பாதுகாப்பு நல னுக்காக இந்த நடவடிக் கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்’ என்றார்.
No comments:
Post a Comment