வாசிங்டன், செப். 29- அமெரிக் காவில் கரோனா தடுப் பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் இதுவரை 21 கோடியே 36 லட்சத்து 57 ஆயிரத்து 193 பேர் கரோனா தடுப் பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டுள்ள னர். அதேவேளை 18 கோடியே 38 லட்சத்து 88 ஆயிரத்து 907 பேர் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள் ளனர்.
இதற்கிடையில், அமெரிக்காவில் கரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பூஸ்டர் டோஸ் எனப் படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப் பாடு மற்றும் தடுப்பு மய் யம் அனுமதியளித்துள் ளது. இதனைத்தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத் தும் பணிகளும் தொடங் கியுள்ளது.
இந்நிலையில், அமெ ரிக்க அதிபர் ஜோ பைடன் கரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத் திக்கொண்டார். 78 வய தான ஜோ பைடன் தடுப் பூசியின் முதல் டோசை கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதியும், 2-ஆவது டோசை ஜனவரி 11-ஆம் தேதியும் செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment