மும்பை, செப். 29- ‘எல்.அய்.சி., ஹவுஸிங் பைனான்ஸ்’ நிறுவனம், அதன் குறைந்தபட்ச வீட்டுக்கடன் வட்டி விகிதமான 6.66 சதவீதத்தை, 2 கோடி ரூபாய் வரைக்குமான கடனுக்கும் விரிவுபடுத்தி உள்ளது.
நடப்பு ஆண்டு ஜூலையில், 50 லட்சம் ரூபாய் வரை புதிதாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு 6.66 சதவீத வட்டியே வாங்கப்படும் என்ற சலுகையை இந்நிறுவனம் அறிவித்தது. தற்போதைய சலுகை, ‘சிபில் ஸ்கோர்’ 700 மற்றும் அதற்கு மேல் இருப்போர் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், அவர்கள் மாதாந்திர ஊதியம் வாங்குவோராகவோ அல்லது சுய சம்பாத்தியம் உள்ளோராகவோ இருந்தாலும் இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும்.
No comments:
Post a Comment