சேலம், செப்.29 சங்ககிரி வட்டம் தேவூர் பேரூராட்சி சந்தைப்பேட்டை மைதானத் தில் செப்டம்பர் 17 காலை 8.45 மணி அளவில் தந்தை பெரியாரின் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேவூர் பேரூர் திமுக பொறுப்பாளர் டி.எம்.முருகன் தலைமையில் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கா.நா.பாலு முன்னிலையில் கீழ்க்கண்ட திமுக தோழர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தோழர்கள் மேனாள் பேரூர் கழக செயலாளர் என்.தங்கவேல் வழக்கறி ஞரணி முனியப்பன், மேனாள் தலைவர் பாவாயி அம்மாள், இளைஞர் அணி கே.எஸ்.கண்ணன், கிருட்டிணமூர்த்தி, ஆதி தமிழர் ரமேஷ், கருப்பண்ணன், எம்.எஸ்.அய்யாவு, கோபால், குண சேகரன், பி.உதயசேகரன். எம்.ஜி.குரு நாதன், அருள், சேட்டு, சக்தி, சி.கார்த்தி, எம்.ஆர்.எஸ்.ராஜா, பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன், சித்தையன் ஆகியோர் உட்பட பொதுமக்களும் கலந்து கொண் டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
தேவூர் மேட்டுக்கடை
செப்டம்பர் 17 காலை 9.15 மணி அளவில் தேவூர் மேட்டுக் கடையின் மயிலம்பட்டி 5ஆவது வார்டு திமுக தோழர்கள், வார்டு செயலாளர் எம்.பி. ஆறுமணி தலைமையில் மாவட்டச் செயலாளர் முன்னிலையில் பெரியார் சிலை மற்றும் பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளர் பாலு உறுதிமொழி கூற அனைவரும் சமூகநீதி நாள் உறுதிமொழி கூறினார்கள்.
திமுக தோழர்கள் தேவூர் பேரூர் கழக அவைத்தலைவர் எம்.பி.அய்யாசாமி, செட்டி, டி.ஜெகன், கவின், சீனிவாசன், குமார், சக்திவேல், மகாலிங்கம் (அதிமுக), ஆர்.செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசிராமணி பேரூராட்சி
செப்டம்பர் 17 காலை 9.30 மணி அளவில் அரசிராமணி பேரூராட்சி மூலப்பாதையில் திமுக தோழர் பி.காவேரி, பேரூர் கழக செயலாளர் தலைமையில் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கா.நா.பாலு முன்னிலையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கலந்து கொண்ட தோழர்கள் அவைத்தலைவர் பி.ஆறு முகம், நெசவாளர் அணி மாவட்டத் துணைச் செயலாளர், வெங்கடாசலம், பேரூர் துணைச்செயலாளர் பி.சித்தன், செந்தில்குமார், சண்முகம், முருகேசன், வெள்ளையன், ஜெயக்குமார், கருணாநிதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.
சின்ன மணலி
எடப்பாடி சின்னமணலி - பெரியார் படிப்பகத்தில் காலை 10 மணி அளவில் 6 அடி உயரத்தில் பெரியார் உலகம் - பெரியார் சிலை பேனர் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. பூக்களால் மலர்தூவி அனைவரும் மரியாதை செலுத்தினர்.
மாவட்ட செயலாளர் கா.நா.பாலு சமூக நீதி நாள் உறுதிமொழி கூற அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கிய (ரூபாய் ஒரு லட்சம்) எடப்பாடி சின்ன மணலி கை.இ.கைலாசமுத்து அவர்களின் குமாரர் கை.முகிலன் மற்றும் அவரது வாழ்விணையர் ஜெயலட்சுமி செல்வமணி ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் கா.நா.பாலுவும், மேட்டூர் மாவட்ட மகளிரணித் தலைவர் கை. அறிவுமணியும் பயனாடைகள் அணி வித்து மகிழ்ந்தனர்.
கலந்துகொண்ட கழகத் தோழர்கள் - மாவட்ட ப.க தலைவர் கோவி.அன்புமதி, நகரத் தலைவர் ஆ.சத்தியநாதன், நகர அமைப்பாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், பெரியார் படிப்பக பொறுப்பாளர் எம்.காமராஜ், மீனவர் விடுதலை வேங்கைகள் நகர தலைவர் பி.மதியழகன், அருள்குமார், நகரத் துணைச் செயலாளர் கார்த்திக், சி.மெய்ஞான அருள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் லட்டு களும், சாக்லேட்களும் வழங்கப்பட்டன.
செப்டம்பர் 17 காலை 11 மணி அளவில் எடப்பாடி பேருந்து இணையத்தில் காமராஜர் சிலை அருகில் பெரியார் படம் வைக்கப்பட்டு - மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
அனைவரும் சுயமரியாதைச் சூரியனின் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்றனர். கழகத் தோழர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மு.ரமேஷ் (மாவட்ட துணை செயலாளர்), க.தனசாமி (நகர செயலாளர்) கலந்து கொண்டனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் முகம்மது ரயீஸ், நகர செயலாளர் நசீர் பாஷா, தலைவர் கலீம் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
காய்கறி வியாபாரிகளும், டெம்போ ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள், தோழர்களும் கலந்து கொண்டனர்.
தேவூர் பேரூராட்சி
செப்டம்பர் 17 மதியம் 12 மணியளவில் தேவூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆர்.செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்றனர்.
எடப்பாடி
செப்டம்பர் 17 மதியம் 1.15 மணி அளவில் எடப்பாடி பேருந்து நிலையம், ஈஸ்வரன் கோயில் திருமண மண்டபத் திற்கு அருகில் திமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண் டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பாஷா தலைமை தாங்கினார். திராவிட கழக மாவட்ட செயலாளர் பாலு முன்னி லையில் திமுக மாவட்ட துணை செய லாளர்கள் சம்பத்குமார், க.சுந்தரம், பொருளாளர் பாலகிருஷ்ணன், முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் நிர்மலா, ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, பரமசிவம், ரவிச்சந்திரன், ராஜேஷ், மிதுன் சக்கரவர்த்தி, பச்சமுத்து, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக முப்பெரும் விழாவின் சிறந்த நகர செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஷா அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் பாலு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார் 143ஆவது பிறந்தநாள் வாழ்த் துக்கள் (17.9.2021), திராவிடம் வென்றது! திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி மலர்ந்தது (7.5.2021), வாக்களித்த வாக் காளப் பெருங்குடி மக்களுக்கு நன்றி! (6.4.2021) என்று ஆயிரம் துண்டறிக் கைகள் வழங்கப்பட்டது.
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி! தெரிவிக்கும் சுவரொட்டிகள், மேட்டூர் மாவட்டம் முழுவதும் ஒட்டப் பட்டன.
ஆர்ப்பாட்டம்
மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து - செப்டம்பர் 20 அன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆர்பாட்டம், எடப்பாடி கடைவீதியில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.
திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கா.நா.பாலு மற்றும் 15ஆவது வார்டு திமுக செயலாளர் எம்.ஆர்.ரமேஷ், 16ஆவது வார்டு செயலாளர் வி. முத்து ரங்கன், கொ.கந்தசாமி, மேனாள் நகர துணைத் தலைவர் தீன் முகம்மது, முருகன், பாரூக் தங்கராசு ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்ட முழக்க மிட்டனர்.
No comments:
Post a Comment