150 ஆண்டுகள் வரலாற்றை சொல்லும் காவல்துறை அருங்காட்சியகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

150 ஆண்டுகள் வரலாற்றை சொல்லும் காவல்துறை அருங்காட்சியகம்

முதலமைச்சர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை,செப்.28- காவல்துறையினர் 150 ஆண்டுகளுக்கு முன்பு பயன் படுத்திய துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள், தோட்டாக்கள், பீரங்கிகள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய பொருள்கள் அடங்கிய பிரம்மாண்ட காவல் அருங்காட்சியகத்தை பொதுமக் கள் பார்வைக்காக முதலமைச்சர் மு..ஸ்டாலின் இன்று (28.9.2021) திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தைக் திறந்து வைக்க வந்த முதலமைச்சர் மு.. ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவல கம் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.7 கோடியில் சுமார் 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.ஏற்கனவே கோயம் புத்தூரில் காவலர்கள் அருங்காட்சி யகம் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரண்டாவதாக அமைக்கப்பட்டிருக் கும் சென்னை எழும்பூரில் காவலர் அருங்காட்சியகத்தில் காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடர்பான அந்த காலத் தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறி விப்புகள், ஆங்கிலேயர் காலத்தில் காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழ்நாடு காவல்துறை யின் தொடக்க கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்ப்படைகளின் ஒளிப்படங்கள், வரலாற்று சிறப்பு மிக்க செய்தி தொகுப்புகள், வயர்லெஸ் கருவிகள், காவல்துறை பதக்கங்கள், கலைப்பொருள்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்காக வைக் கப்பட்டுள்ளன.

முக்கியமாக தமிழ்நாடு சுதந்திரத் துக்கு முன்பும், பின்பும் வரலாற்றில் சந்தித்த மிக முக்கியத் தருணங்களை யும், அதில் காவல்துறைக்கு இருந்த பங்கையும் காலவரிசைப்படி அன் றைய காலத்தில் எடுக்கப்பட்ட அரிய ஒளிப்படங்களுடனும், அது குறித்த வரலாற்று குறிப்புகளுடனும் காவல் துறை அருங்காட்சியகத்தில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சிகம் பொதுமக் களுக்கு அர்ப்பணிக்கும் விழா, இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழா வுக்கு தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு இயக்குநர் சி.சைலேந்திரபாபு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின், அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அர்ப் பணித்து, அருங்காட்சியகத்தைப் பார் வையிட்டார்.

அப்போது, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் பார்வை யிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், காவல்துறை உயரதி காரிகள் பலரும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment