பயிற்சி மய்யத்தை நடத்தியவரே மோசடிக்கு உடந்தை
ஜெய்ப்பூர்,செப்.28- ராஜஸ்தானில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி நுழைவுத்தேர்வு (ஆர்இஇடி) எழுத காலணியில் ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தானிலுள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆர்இஇடி தேர்வு நடத்தப்படுகிறது. 2 நாள்களுக்கு முன்பு நடந்த இந்தத் தேர்வை எழுத16.51 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு மய்யத்துக்கு வந்த சிலர் வித்தியாசமான முறையில் காலணி அணிந்திருந்ததால் அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது காலணிகளில் ப்ளூடூத் பொருத்தப்பட் டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆஜ்மீரை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஜெகதீஷ் சந்திர சர்மா கூறும்போது, “அடுத்த முறை தேர்வு நடக்கும்போது காலணிகள், ஷூக்கள், கால் உறைகள் அணிந்துவர அனுமதிக்க மாட்டோம். இந்த ப்ளூடுத் காலணிகளின் விலை ரூ.6 லட்சம் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 40 பேரை கைது செய்துள்ளோம். 24 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
இதனிடையே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த ப்ளூடூத் காலணிகளை உருவாக்கியவர், தேர்வுக்காக பயிற்சி அளிக்கும் மய்யத்தின் உரிமையாளர் என்று தெரியவந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment