தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள 37.3 டிஎம்சி நீரை உடனடியாக வழங்கவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 28, 2021

தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள 37.3 டிஎம்சி நீரை உடனடியாக வழங்கவேண்டும்

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

புதுடில்லி,செப்.28- காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தின் 14ஆவது கூட்டம் டில் லியில் உள்ளஒன்றிய நீர்வள ஆணையத்தின் அலுவலகத் தில் ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமை யில் நேற்று (27.9.2021) நடை பெற்றது.

இதில் தமிழ்நாடு பொதுப் பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்பக் குழு தலைவர் சுப் பிரமணியன் உள்ளிட்டோ ரும், கருநாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் ங்கேற்றனர். சந்தீப் சக் சேனா பேசும் போது, ‘‘கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் வரை நிலு வையில் உள்ள 30.6 டிஎம்சி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்க கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், கரு நாடகா முறைப்படி தண் ணீரை வழங்கவில்லை. இது உச்சநீதிமன்ற தீர்ப்பை மட்டு மல்ல, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை யும் அவமதிக்கும் செயல்.

தமிழ்நாட்டுக்கு 37.3 டிஎம்சி நீரை கருநாடகா இன் னும் வழங்க வேண்டியுள்ளது. கருநாடகாவில் மழை பெய்து வருவதால் நிலுவை யில் உள்ள நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண் டும். அதேபோலஅக்டோ பரில் வழங்க வேண்டிய 20 டிஎம்சி நீரையும் முறையாக வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை சாகுபடிக்கு நீர் தேவைப்படுவதால் கருநா டக அரசு உடனடியாக நீரை திறக்க உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தினார்.

கருநாடக அரசு தரப்பில், ‘‘கருநாடகாவில் கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்த அளவில் மழை பெய்துள்ளதால் கிருஷ்ண ராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்ட வில்லை. எனினும் தமிழ்நாட் டுக்கு முறையாக நீர் திறக்கப் படுகிறது'' என்று தெரிவிக்கப் பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார், ‘‘தமிழ்நாட் டுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள 37.3 டிஎம்சி நீரை உடனடியாக வழங்கவேண்டும். நான்கு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால் மட்டுமே மேக தாது திட்டம், காவிரி குண் டாறு இணைப்பு திட்டம் ஆகியவற்றை பற்றி விவா திக்க முடியும்’’ என்றார்.

No comments:

Post a Comment