டோக்கியோ, செப். 6- டோக் கியோ பாராலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் (5.9.2021) நிறைவடைந் தன. இந்தப் போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் முதல் முறையாக 19 பதக்கங் களைப் பெற்று இந்தியக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர். அவர் களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா லிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கின. இதில் 162 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 54 வீரர், வீராங் கனைகள் 9 விளையாட்டு களில் பங்கேற்றனர். சுமார் 2 வார காலம் நடந்த பாராலிம்பிக், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நேற்று நிறைவடைந்தது.
நிறைவு விழா அணி வகுப்பில் இந்திய தேசியக் கொடியை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற வீராங்கனை அவனி லேகாரா ஏந்திச் சென்றார். அவருடன் இந்தியாசார் பில் 11 பேர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
கடைசி நாளான நேற்று (5.9.2021) இந்தியா 2 பதக்கங்களை கைப் பற்றியது. ஆடவருக்கான பாட்மிண்டன் எஸ்எச் 6 ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் 21-17, 16-21, 21--17என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் மான் ஹை சூவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அதேவேளையில் எஸ் எல் 4 பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் 21--15, 17--21, 15--21 என்ற செட் கணக்கில் போராடி பிரான்ஸின் லூகாஸ் மசூரிடம் தோல் வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். சுஹாஸ் யதிராஜ், நொய்டா மாவட்ட நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் பாரா லிம்பிக் தொடரில் இந் தியா ஒட்டுமொத்தமாக 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக் கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 24ஆவது இடம் பிடித்தது. பாரா லிம்பிக் வரலாற்றில் 1968 முதல் இந்தியா பங்கேற்று வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பாராலிம்பிக் வரை மொத்தமாக 12 பதக்கங்கள் மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், முதல்முறையாக டோக்கி யோவில் இம்முறை 19 பதக்கங்கள் குவித்து வர லாற்று சாதனை படைத் துள்ளது.
இதற்கு முன்பு அதிக பட்சமாக 1984ஆம் ஆண்டு நியூயார்க் பாராலிம்பிக் மற்றும் 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்கில் தலா 4 பதக்கங்கள் பெற் றிருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறிய டித்து தற்போது முதல் முறையாக இரட்டை இலக்கத்தில் பதக்கங் களை பெற்று சாதனை படைத்துள்ளனர் இந்தி யக் குழுவினர்.
இந்தியா சார்பில் துப் பாக்கி சுடுதலில் அவனி லேகாரா, பாட்மிண் டனில் பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர், ஈட்டி எறிதலில் சுமித் அண்டில், துப்பாக்கி சுடுதலில் மணீஷ் நார்வால் ஆகி யோர் தங்கப்பதக்கம் வென் றனர். டேபிள் டென்னி ஸில் பவினாபென் படேல், துப்பாக்கிச் சுடுதலில் சிங் ராஜ் அதனா, வட்டு எறி தலில் யோகேஷ் கதுனியா, உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார், மாரியப் பன் தங்கவேலு, பிரவீன் குமார், ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா, பாட்மிண்டனில் சுஹாஸ் யதிராஜ் ஆகியோர் வெள் ளிப் பதக்கம் கைப்பற்றி யுள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சுடுதலில் அவனி லேகாரா, வில்வித்தையில் ஹர்விந்தர் சிங், உயரம் தாண்டுதலில் சரத் குமார், ஈட்டி எறிதலில் சுந்தர் சிங் குர்ஜார், பாட்மிண் டனில் மனோஜ் சர்கார், துப்பாக்கிச் சுடுதலில் சிங் ராஜ் அதனா ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
பதக்கப் பட்டியலில் 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என மொத் தம் 207 பதக்கங்கள் குவித்து சீனா முதலிடம் பிடித்தது. 41 தங்கம், 38 வெள்ளி, 45 வெண்கலம் என 124 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2ஆவது இடமும், 37 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலம் என 104 பதக்கங்களுடன் அமெரிக்கா 3ஆவது இடமும் பிடித்தன.
No comments:
Post a Comment