சிங்கப்பூர், செப். 6- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்க ளுக்கு சிங்கப்பூரில் “ மக்கள் முதல் வர்" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்கள்.
பழைய திருச்சி மாவட்டம் - கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளி லிருந்து சிங்கப்பூர் புலம் பெயர்ந்து குடியுரிமை பெற்றவர்களும், நிரந் தரவாசிகளும், பணியாற்றுபவர் களும் தங்கள் பகுதியில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற வர லாற்று சின்னம் கட்டப்பட்ட தனால் பெருமையடைந்து, அதைக் கட்டிய மாமன்னர் இராஜேந்திர சோழன் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு - "அரசு விழா"வாக ஆண்டு தோறும் கொண்டாடப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கும், தொழில் துறை அமைச் சர் தங்கம் தென்னரசு அவர்களுக் கும், சிவசங்கரன் அவர்களுக்கும் 29.08.2021 அன்று மாலை இணை யம் வழி நடைபெற்ற பன்னாட்டுச் சான்றோர் இருபத்தி அய்ந்து பேர் பங்கேற்ற கூட்டம் வாயிலாக நன் றியறிதலைத் தெரிவிப்பதற்காகக் கூடியிருந்த போது நிறைவேற்றப் பட்ட தீர்மானம்.
சிங்கப்பூர் - வரலாற்று மரபுடை மைக் கழக ஒப்புதல் பெற்று இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறோம்.
இன்றைய நாளில் பார்க்கும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு மக்கள் முதல்வராக இருந்து எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாகவும், புத்திசாலித்தன மாகவும், பலதுறை விற்பன்னர் களின் அறிவுரை பெற்றும், "தான்" எனும் அகந்தை இல்லாமலும், நடுவு நிலையுடன் செயல்படும் அதிகாரிகளின் துணைகொண்டும், நேர்மையான காவல் துறை அதி காரிகளின் உறுதுணையுடனும், எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மையோடும், சமூக நீதி காத்தும், ஊழலற்ற திறமையான ஆட்சியைக் கொடுத்துத் தமிழ்நாடு மக்களின் மனங்களை வென்று வருகிறார். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்க ளொடு, உலகெங்கணும் பரவிக் கிடக்கின்ற தமிழர்களின் வயிறு களில் பால் மட்டுமல்ல தேனையும் சேர்த்து ஊற்றிக்கொண்டிருக் கிறார் இன்றைய தமிழ்நாடு முத லமைச்சர் அவர்கள்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சமூக நீதி, பெருந் தலைவர் காமராசரின் கல்விக் கொள்கை; எளிமை, அரறிஞர் அண்ணா முன்மொழிந்த மாநில சுயாட்சி, முத்தமிழறிஞர் கலைஞ ரின் ஓய்வறியா உழைப்பு; உறவுக்குக் கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல்கொடுப்போம் எனும் தாரக மந்திரம், அத்துடன் மக்கள் தலை வர் எம்ஜியாரின் இரக்கமுடமை, ஜெயலலிதா அம்மையாரின் துணி வுடமை ஆகியவற்றையெல்லாம் மனதிற்தாங்கிச் செயலாற்ற இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராய்ப் பொறுப்பேற்று மக்கள் எதிர்பார்க் கின்ற; மக்களுக்குத் தேவையான, தனக்கு வாக்களித்தவர்கள் மகிழ வாக்களிக்காதவர்கள், வாக்களிக் கத் தவறிவிட்டோமே என்று எண்ண வைக்கும் அளவிற்குப் பொது மக்களின் ஊழியராய்ப் பணியாற்றி வருகிறார்.
எதிர்த்தரப்பினரும், ஊடகங் களும், ஏழை எளிய மக்களும், குறிப்பாகப் பெண்களும், சமூக நீதியால் புறக்கணிக்கப்பட்டவர் களும் - என அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டப்படுகின்ற அளவுக்கு அல்லும் பகலும் தன் முழு சிந்தனையையும் செயல்பாட் டினையும் காட்டி உழைத்து வரு கிறார்.
மாமன்னர் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததற்காக மட்டு மல்லாது, இந்தப் பகுதி, இந்த இனம், இந்த மொழி, இந்த மதம் என்று பாராது, சமூக நீதி காத்து உழைத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.
எப்படிச் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் அவர்களைச் சிங் கப்பூரில் 'மக்கள் அதிபர்' என்று அழைத்தார்களோ?
இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை 'மக்கள் குடியரசுத் தலைவர்' என்று அழைத்தார்களோ?
அதேபோல் தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் மக்களுக்காக உழைக்கும் பொது முதல்வராக விளங்குவதால் இனி
"மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் "
"மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் " என்று அழைத்து நம் நன்றியறிதலை தெரிவிப்போம் என வரலாற்றுப் பெருமைமிகு இந் நிகழ்ச்சியில் ஒரு தீர்மானமாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சார் பில் உரக்க முன்மொழிந்து மகிழ் கிறோம்.
- புதுமைத்தேனீ மா. அன்பழகன்
சிங்கப்பூர்

No comments:
Post a Comment