சோலையார்பேட்டை சி. இளங்கோ மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

சோலையார்பேட்டை சி. இளங்கோ மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

சோலையார்ப்பேட்டை, செப். 6- திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை சுயமரியாதைச் சுடரொளி சின்னதுரை அவர்களின் மகன் பகுத்த றிவாளர் கழகப் பொறுப் பாளர் சி. இளங்கோ 26.8.2021 அன்று மறைவுற்றார்.

பகுத்தறிவாளர் கழ கத்தின் மாவட்ட தலை வர் சி. தமிழ்ச்செல்வன், அண்ணாதுரை, மணி மேகலை ஆகியோரின் சகோதரரான இளங்கோ அவர்களின் இறுதி நிகழ்வு எவ்வித மூடச்சடங்குகள் இன்றி நடைபெற்றது.

முன்னதாக நடை பெற்ற இரங்கல் கூட்டத் திற்கு மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை தாங்கினார். அதிமுக மாவட்ட செய லாளரும், மேனாள் அமைச் சருமான கே.சி.வீரமணி, மதிமுக மாவட்ட செய லாளர் .கண்ணதாசன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப் பாளர் ஏலகிரி செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா.சரவணன், மண்டல தலைவர்

வி.சடகோபன் ஆகியோரின் இரங்கல் உரைக்குப்பின் தலைமைக் கழகத்தின் சார்பில் பங்கேற்ற மாநில அமைப்புச்செயலாளர் ஊமை.ஜெயராமன் வீரவணக்க இரங்கல் உரையாற்றினார்.

நிகழ்வில் காமராஜ் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை தலைவர் கணேஸ்மல், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா, மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் .சிற்றரசன், மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ, மாவட்ட மகளிரணி தலை வர் .கவிதா, இளைஞ ரணி மாவட்ட செயலா ளர் பழனிசாமி, மாவட்ட துணைத்தலைவர் தங்க. அசோகன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கோ.திருப் பதி, கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.பழனி, மாவட்ட செயலாளர் .வெங்கடேசன், ஆசிரிய ரணி மாவட்ட செயலா ளர் சே.ஜானகிராமன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் நிலவன், மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், துணைத் தலைவர் தனஞ்செயன், பொதுக்குழு உறுப்பினர் .ஜான்சிராணி, மத்தூர் ஒன்றிய இளைஞரணி துணைச்செயலார் மு.சிலம்பரசன், ஊற்றங் கரை ஒன்றிய தலைவர் பொன்முடி, செயலாளர் சிவராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப் பாளர் சித.அருள், சித.வீரமணி, திருப்பத்தூர் நகர கழக இளைஞரணி தலைவர் ஜிம் சுரேஸ், கமல், பெரியார், முருகன், வாணியம்பாடி நகர கழக தலைவர் அன்புச்சேரன், அக்ரி அரவிந்த், பெரியார் பெருந்தொண்டர் நரசிம் மன், ஜெ.எம்.பி. பெரியார் மற்றும் கழகத்தோழர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு, ஊர் வலமாக எடுத்துச்சென்று அடக்கம் நடைபெற்றது.

No comments:

Post a Comment