இலங்கை மீனவர்கள் மீது புகார்
காரைக்கால், செப். 6 காரைக்கால் மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கி ரூ.5 லட்சம் மதிப் பிலான மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றதாக, காரைக்கால் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு பகுதிகளைச் சேர்ந்த 11 மீனவர்கள் 2 ஃபைபர் படகுகளில் 3.9.2021 அன்று காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அன்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள், காரைக்கால் மீனவர்களைத் தாக்கிய துடன், அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பி லான மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் உள் ளிட்டவற்றை பறித்துச் சென்றதாக கூறப்படு கிறது. இதில், காரைக்கால் மீனவர்கள் 6 பேர் காயமடைந்தனர்.
பின்னர் அனைவரும் 4.9.2021 அன்று காலை கரைக்கு திரும்பினர். காயமடைந்த 5 மீனவர்கள் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பலத்த காயமடைந்த செண்பகம் என்பவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காரைக்கால் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின் றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவரை காரைக்கால் தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நாஜிம் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல, நாகை மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் 4 மீனவர்கள் கடந்த 2-ஆம் தேதி மதியம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அன்று இரவு 7 மணியளவில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இயந்திர படகில் வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக் கியால் வானத்தை நோக்கி சுட்டனர். தொடர்ந்து, மீனவர்களின் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான வலையை அறுத்து, எடுத்துச் சென்று விட்டனர்.
இதையடுத்து, கரை திரும்பிய மீனவர்கள் அளித்த புகாரின்பேரில், வேதாரண்யம் கடலோர காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து
செப்.20இல் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கண்டனப் போராட்டம்
தலைவர்கள் கூட்டறிக்கை!
சென்னை,செப்.6- வேளாண் சட்டங்கள், பெட் ரோல் -டீசல்-எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக ஒன்றிய அரசைக் கண்டித்து அரசைக் கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் போராட்டம் 20.9.2021 அன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அக்கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியாகாந்தி அம்மையார் அவர்கள் தலைமையில் 20.08.2021 நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், "மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு" உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப் பட்டது.
அதன்படி ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திமுக.தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் 20.-9.-2021 (திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றோம். ஒருங்கிணைந்து போராடுவோம். மதசார்பற்ற - ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம். இவ்வாறு கூட்டறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6,156 ஆசிரியர், பணியாளர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு
சென்னை, செப்.6 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 6,156 ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் பணி நீட்டிப்பு வழங்கி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை; தமிழ்நாட்டில் அரசு மற்றும் நிதியுதவி பள்ளி களில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6,156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக் கான பணிக்காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்த 6,156 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-_2023) தொடர் நீட்டிப்பு வழங்கக்கோரி பள்ளிக்கல்வி ஆணையர் தமிழ்நாடு அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார்.
அதை பரிசீலனை செய்து 6,156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 2023 டிசம்பர் 31-ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெ டுக்கும் வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.
No comments:
Post a Comment