புதுடில்லி, செப்.6 ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரக்கலா பிரபாகர், தனியாக யூ-டியூப்சேனல் நடத்தி வரு கிறார். அதில், அரசியல், பொருளாதாரம் தொடர் பாக வாரந்தோறும் கருத் துக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக் கிறார். அந்த வகையில், கடந்த வாரம் பதிவேற்றி யுள்ள காட்சிப் பதிவில் மோடி அரசின் செயல் பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். காட் சிப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
புதிய இந்தியாவை உருவாக்குவதாகக் கூறிக் கொண்டு ஒன்றிய அரசு அபத்தங்களை அரங் கேற்றிக் கொண்டிருக் கிறது. ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தை பொழுது போக்கு பூங்கா வாக மாற்றிவிட்டது.மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாள்கிறது. சிறுபான்மை சமூகத் தினர் தாக்கப்படுவதற்கு பாஜக-வினரின் தூண்டு தல்களே காரணம். நாட் டின் தலைநகரில் ஊர் வலமாகச்செல்லும் வன் முறை கும்பல், சிறுபான் மையினருக்கு எதிராக பகிரங்கமாக முழக்கமிடு கிறது. அரசியலில் ஈடு படும் பெண்கள்- ஆளும் பாஜகவைச் சேர்ந்த வர்கள் உட்பட அனை வரும், ஆண் தலைவர் களின் கைப்பாவைகளாக வும் அவர்களின் தேவை களுக்காகவும் மட்டுமே உள்ளனர் என்று ஒரு சாமியார்கூறுகிறார்.
போராடும் விவசாயிகளின் மண்டையை அடித்து உடையுங்கள் என்று ஒரு அய்ஏஎஸ் அதிகாரி கூறுகிறார். அதற்கு அந்த மாநிலத் தின் பாஜக முதலமைச் சராக இருப்பவர் வக்கா லத்து வாங்குகிறார். மத்தியப் பிரதேச மாநி லத்தில், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் லாரியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறார். நாடு வேகமாக முன் னேறிக் கொண்டிருப்ப தால் இந்த சம்பவங்கள் அனைத்தும் ஆட்சியா ளர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. 75-ஆவது சுதந்திர நாளைக் கொண் டாட இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட ‘டிஜிட்டல் போஸ் டரில்’ ஜவஹர்லால் நேருவின் படம் இடம் பெறாதது கூட அவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது.
இவ்வாறு பரக்கலா பிரபாகர் விமர்சித்துள் ளார்.

No comments:
Post a Comment