தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை

சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை, செப்.6 சென்னையில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத் துள்ளார்.

 சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில்  செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண் டாடுவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகி களை அந்தந்த காவல் நிலையங் களுக்கு அழைத்து பேச்சுவார்த்தை மூலம் அறிவுறுத்தப்பட்டு வரு கிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று காவல்துறையினர் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். எனவே தடையை மீறி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மெரினா கடற் கரையில் இளைஞர்கள் மூழ்கி மரணமடையும் சம்பவங்களை தடுப்பதற்காக மாநகராட்சி, மீன வர்கள், காவல்துறை இணைந்து குழு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சைபர் கிரைம் தொடர்பான குற்ற வழக் குகளை தடுப்பதற்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் லேப் உருவாக்கப் பட்டு வருகிறது. சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment