அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, செப்.6 பள்ளிகள் திறந்த உடன் தான் மாணவர்கள், ஆசி ரியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது என் பது தவறான கருத்து என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள் ளார்.
சென்னை கிண்டி மடுவாங்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாது காப்பு வாரத்தை மருத் துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 4.9.2021 அன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி யதாவது:-
மழை நீர் சேகரிப்பு திட்டம் இந்தியாவி லேயே முன்னோடி திட் டமாக செயல்பட்டு வரு கிறது. சைதாப் பேட்டை யில் மட்டும் 148 இடங் களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கப்பட் டுள் ளது. சென்னையில் உள்ள 25 நீர்நிலைகள் ரூ.200 கோடி மதிப்பீட் டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சென் னையில் 10.94 லட்சம் குடியிருப்பு உள்ளது.
தவறான கருத்து
அதில் 8 லட்சத்து 24 ஆயிரம் குடியிருப்பு களுக்கு தனித்தனியே குடிநீர் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2 லட்சம் குடியிருப்புகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் தனித்தனியே குடிநீர் இணைப்புகள் தரப்பட உள்ளோம். வருங்காலத் தில் தண்ணீர் பிரச்சி னையே இல்லாத மாநக ரமாக சென்னை மாறும். கடந்த 1-ஆம் தேதி பள் ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள், ஆசி ரியர்களுக்கு தொற்று ஏற்பட்டது என்பது தவ றான கருத்து. அவர் களுக்கு முன்பே அறிகுறிகள் இருந்ததால் தான் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. பாதிக்கப்பட்டவர் களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை, கேரள எல் லைப்பகுதியில் இருப்பதால் தொற்று அதிகரித்துள்ளது. மேலும், கேரள எல் லை யையொட்டி இருக்கக் கூடிய 9 மாவட்டங் களிலும் தொற்று அதி கரித்து வருகிறது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி
அந்த 9 மாவட்டங் களில் கூடுதலாக தடுப்பூசி போடுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நல்வாழ்வுத்துறை எடுத்து வருகிறது. அதே போல, கேரளாவிலும் மிக சிறப்பான நடவ டிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தசை சிதைவு போன்ற நோயினால் தமிழ்நாட்டில் 7 குழந்தைகள் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த இடத் திலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவில்லை.
கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், 17 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஒன்றிய அரசிடம் பேசி இருக்கிறோம். அது குறித்த ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment